சந்திப்புகள் பலவிதங்களில் நிகழ்கின்றன. எந்த சந்திப்பிலும் மனம் ஒன்றிவிடுவதில்லை. இருந்தாலும் சில சந்திப்புகளை மனம் அசைபோடவே செய்கிறது.
ஒருவரை நீண்ட நாட்களுக்கு பிறகு எதிர்பாராமல் சந்தித்து விடுகிறோம். அந்த அபூர்வ தருணம் மண்வாசனையை போல் மனதில் வீசும்.காலிங் பெல்சத்தம், செல்போன் சிணுங்கல், கதவு தட்டும் ஓசை இப்படி எந்த வடிவத்தில் வரும் அழைப்புகள்....தெரியாத ஒன்றாகவே இருக்கின்றன. இருந்தும் சந்திப்பின் இனிமை சுகம்.
சிறைச்சாலைகளில்சந்திக்க வரும் உறவுகள்,நண்பர்கள் எல்லோரும் சோகம் சுமந்தாலும் எதோ ஒன்றில் விட்டத்தை பெரிதாக்கவே செய்கின்றனர் என்பதை சொல்லவேண்டியதில்லை.
பழகிய இடம், பேசிய வார்த்தைகள்,பார்த்த காட்சிகள் எல்லாமும் கம்பிகளுக்கு பின்னால் சடுகுடு ஆடலாம்.......உங்களுக்கு எப்படியோ என்னால் இப்படித்தான் இருக்க முடியும் என்பதை சொல்லாத சிலரின் அவதானிப்புகள் கேள்விக்கேட்க்கலாம். " எல்லா சந்திப்புகளும் சுகமா சோகமா என்று" ??????
என்னையும் உன்னையும் சந்திக்க வைத்த அந்த தருணத்தை என்ன வென்று சொல்வது-இப்படி கேள்வி கேட்க காதலும் ஒரு காரணம் அவ்வளவுதான்.
ஓராண்டுக்கு பிறகு இன்று ஷார்ஜாவில் இருந்து ஜியாவுதீன் குடும்பத்தினர் வந்திருந்தனர். UAE யில் உங்கள் சக்தி 94.7 பண்பலை வானொலியில் பணியில் இருந்தபோது நேயராக எனக்கு அறிமுகமான குடும்பம் இன்று சென்னைக்கு அதுவும் எனது அலுவலகத்திற்கு வந்தனர். மனது முழுக்க மகிழ்ச்சியுடன் அவர்களின் வருகை என்னை உற்சாக படுத்தியது.....வெளியே லேசான மழை....எனக்குள் இதமான அன்பின் மண் வாசனையை நுகரமுடிந்தது.வானொலியில் இப்போதெல்லாம் உங்களை போல் நிகழ்ச்சி யாரும் வழங்குவதில்லை UAE யை விட்டு நீங்கள் வந்த பிறகு ஒரு பெரும் இழப்பை எங்களால் உணரமுடிகிறது எனபதாக ஜியாவுதீன் பேசியது சந்திப்பின் அவசியத்தை விட அந்த தருணத்தின் சந்தோசம் என்னை வெகுவாக கவர்வதாக இருந்தது.
நம்மை சந்திக்க வரும் நமது நண்பர்களாகட்டும், மற்றவர்களாகட்டும் சில இழப்புகளை பற்றியோ இல்லை பெற்றவைகளை பற்றியோ பேசுவது சம்பிரதாயமாக அமைந்து விடுகிறது என்பதை சொல்லமால் இருக்க முடிவதில்லை.இன்னுமிரண்டு நாளில் ஷார்ஜா செல்லவிருப்பதாக சொன்னார். சக்தியில் வேலையில் இருந்த போது இருந்த என் நினைவுகளை இந்த சந்திப்பு மீட்டு எடுப்பதாகவே பட்டது.
ரயில் சிநேகம் கூட சில நேரம் அபூர்வ விசயங்களை பரிமாறுவதாக அமைந்து விடலாம். பிறகு அந்த சந்திப்பின் தொடர்ச்சியை மனம் எதிர் பார்க்கவே செய்யும்...மழை விட்ட பிறகும் இலைகளின் வழியாக நீர் சொட்டிக்கொண்டு இருக்கிறதே அது போல.......
0 comments:
Post a Comment