கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

வாழ்த்துகளும் வார்த்தைகளும்........ஒவ்வொரு நாளும் பிறந்த நாளாக இருக்கவே நினைக்கிற மனசு குழந்தையாகி விடுகிறது எல்லோருக்கும். நேற்றைய நாளும், இன்றைய நாளும், பெரிய வித்தியாசத்தை உண்டு பண்ணா விட்டாலும் வகை படுத்தும் சந்தோசத்தில் திளைக்கிறது எல்லோருக்குமான மனசு. ஒருவகையில் பிறந்த நாள் கூட அவசியமான பொழுதாகவே அவதானிக்க படுகிறது.வாழ்த்துகளை பகிர்கிற எந்த ஒன்றிலும் நமக்கான வாழ்க்கை கண்சிமிட்டு கிறது. நாமோ, மற்றவரோ பிறந்த நாளை பிரதான படுத்துகிற போது காற்றுக்கு கூட லேசாக வெட்க்கம் வரலாம். காலண்டர் தாள்களாய் கிழிக்கப்படுகிற ஒவ்வொரு நொடியும் புணரமைக்க படுகிறது என்பதான நிகழ் எடுபடுவதில்லை எப்போதும்.


குடும்பத்தில் இருப்பவருகோ, நண்பர்களுக்கோ, பிரபலமானவருக்கோ பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறபோது ஒருவர் அடுத்த வாழ்த்தை பத்திர படுத்துகிறார் என்பதாவே சொல்லிக்கொள்ள வேண்டும். ஏனெனில் வாழ்த்துகளுக்கு கால்களும் உண்டு காதுகளும் உண்டு. கேட்கும் பல நேரம் பேசும்.......
எனக்கான வாழ்த்துகள் எப்போதும் ஈரம் தடவியே வந்திருக்கிறது. அது போல் தான் என்னால் சொல்லப் படுகிற வாழ்த்துகளும் நேசம் பூசியே சொல்லப்படுகிறது. இப்போதெல்லாம், வாழ்த்துகளை காசுகொடுத்து சொல்லிகொள்ளவோ, இல்லை தவணை முறையில் சொல்லி கொள்ளவோ தான் அவரசபடுத்துகிறது எல்லோருக்குமான எதார்த்த வாழ்க்கை.
சிரமம் இல்லாத ஒன்று வாழ்த்துவது. எல்லா வார்த்தைகளும் அணிவகுக்கும். என்னை எடுத்துகொள், என்னை எடுத்துகொள் என்று அழகுக்காட்டும். சில நேரம் நம்மை நனைத்து ஜன்னல் திறக்கலாம் வாழ்த்துகள். எப்படியோ மாற்ற வாழ்த்துகளை விட பிறந்த நாள் வாழ்த்துகள் சிறப்பானவை. இன்று புதியதாய் பிறந்தோம் என்பது எல்லா நாளும் முடியா விட்டாலும் பிறந்த நாளில் மட்டுமாவது பரிசீலிக்க படுகிறது என்பதை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும்.

வாழ்த்துகளை சொல்கிறபோது மனிதன் மரியாதைக்குரியவனாகிறான். கைக்குலுக்கி கொள்கிற ஒவ்வொரு மனிதனும் அடையாளப்படுதப்படுகிறான். இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளை சொல்வதில் எனக்கு மகிழ்ச்சி அதே வாழ்த்தை பெறுகிற எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதுதான் இப்போதைய கணிப்பாக இருக்கிறது.....

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed