கீதாஞ்சலி

இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....

பூங்கா

அன்பு நண்பர்களே
பொதுவாக எல்லோருக்கும் படம் எடுக்க ஆசை வரும் ஈன்க்கும் வந்தது.....
சின்ன கேமராவில் பூங்காவை பதிவு செய்திருக்கிறேன்.
பாருங்கள் உங்களின் கருத்துகளை தெரிவியுங்கள்.....
ஈரமண்ணின் நேசத்துடன்,
ரா.நாகப்பன்.

"இன்றைய செய்திகள்"....

அன்பு நண்பர்களே
"இன்றைய செய்திகள்"....
கொஞ்சம் காது கொடுக்கலாமே!
முடிந்தால் உங்கள் கருத்துகளை பதியலாம்.

ஈரமண்ணின் நேசத்துடன்,
ரா.நாகப்பன்.

"காதல் திருடா" திரைப்படத்தில் நான் எழுதிய பாடல்...

"காதல் திருடா" திரைப்படத்தில் நான் எழுதிய பாடல்...பாடகர்: பிரபாகர்
இசை: பரணி
இயக்கம்: ஜெய ஆதித்யா
நடிப்பு: குணால், ஷெரின் மற்றும் பலர்


கொஞ்சம் காத்து கொடுக்கலாமே!
முடிந்தால் உங்கள் கருத்துகளை பதியலாம்.


ஈரமண்ணின் நேசத்துடன்,
ரா.நாகப்பன்.

இன்றைய செய்திகள்

அன்பு நண்பர்களே
"இன்றைய செய்திகள்"....
கொஞ்சம் காது கொடுக்கலாமே!
முடிந்தால் உங்கள் கருத்துகளை பதியலாம்.

ஈரமண்ணின் நேசத்துடன்,
ரா.நாகப்பன்.

கேப்டன் டிவியில் எனது பாடல்.....!

அன்பு நண்பர்களே...!
கேப்டன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் "இயக்குனர் ஈஸ்வரன்" என்கிற தொடர் ஒளிப்பரப்பாகிறது...
இத்தொடரின் தலைப்பு பாடலை எழுதி இருக்கிறேன்...
இதன் இணைப்பை இத்துடன் இணைத்துள்ளேன் முடிந்தால் பார்க்கவும்.

http://www.youtube.com/watch?v=Qu4wQFoEEC8

ஈரமண்ணின் நேசத்துடன்,

ரா.நாகப்பன்

அபூர்வ தருணம்.....!


வணக்கம் நண்பர்களே!
எனது நண்பர் கவிஞர் ஆசூர்.க.தங்கதாசன் தன் "கங்கா ராணி பதிப்பகம்" மூலம் வெளியிட்டுள்ள
"கற்றலும் கற்ப்பித்தலும்" என்ற நூல் 2009-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் முதல் பரிசினை பெற்றுள்ளது.
ஆசிரியர்: ஜவகர்.சு.சுந்தரம்.சிறந்த பதிப்பகமாக தேர்வாகியுள்ள "கங்கா ராணி பதிப்பகம்" பல வெற்றிகள் பெற்று வளர இறைவனை வேண்டுகிறேன்.

நல்ல புத்தககங்களை வெளிட்டு வரும் இப்பதிப்பகம் தங்களின் நல்ல புத்தகங்களையும் வெளியிட ஆவண செய்யும்...

தொடர்பிற்கு: கவிஞர் ஆசூர்.க.தங்கதாசன்
தொலைபேசி எண்: +91 9884057267

அன்புடன்,
ரா.நாகப்பன்

நெருப்பு கொஞ்சம் கவிதை கொஞ்சம்.....


வணக்கம் நண்பர்களே!
நான்காம் வகுப்புப் படிக்கும் என் அன்பு மகன் நா.விஜய அரவிந்த ஹரி
தன் குட்டி கேமராவில் நெருப்பின் நடனத்தை பதிவு செய்திருக்கிறான்....
தந்தையான நான் என் பங்கிற்கு ஒவ்வொரு படத்திற்கும் கவிதைகள் எழுதி இருக்கிறேன்.
வாசியுங்கள்...
உங்களின் விமர்சனங்களை பின்னூட்டம் இடுங்கள்....
அன்புடன்,
ரா.நாகப்பன்.


*புகைகிறபோதும் புரியவில்லை எரிகிறபோதும் தெரியவில்லை நெருப்பு சுடும் என்பது...!
*நெருப்பின் கேமராக் கண்களில் காணாமல்
போனது மழலைக் கனவு!

*எல்லாம் எரித்தாயிற்று நெருப்பின் மிச்சமாய் சில கண்ணீர்த்துளிகள்!

*அம்மாவின் சமையலறை நெருப்பு காபி டம்பளரில் உதடு தொடுவதற்குள் பதறித் துடிக்கிறது நாக்கு...!

*நெருப்பிற்கு என்னத்தெரியும் சாம்பலாகும் பொருள்களின் மகிமைப் பற்றி!
*விட்டு வைப்பதில்லை எதையும்... விட்டுக்கொடுப்பதில்லை இதையும்,,,!

*புன்னகைப் பூக்கும் நெருப்புப் பூப்பறிக்க நினைக்கிறது மனசு!

*தீயின் "தீம் தரிகிட".... காற்றின் "சரிகமபதநி" .... சில்லென்ற காலை கொஞ்சம் அனல் வீசக் கடவது!

*அடவுக் கட்டும் நெருப்பு தெருக்கூத்துப் பார்க்கும் வீதி சிரித்துத் தொலைக்கும் வெட்கம் கெட்டக் காலை...

*வர வர மறதியை நெருப்புத் தின்னட்டும் கவிதையை கனவு கிழிக்கட்டும்!

*நெருப்பின் ஜன்னலை திற...அழகான ஓவியம் கண்சிமிட்டி அழைக்கலாம்...!

*நெருப்பின் நடைவண்டி என் மகனின் கேமராவில் பழகிக்கொண்டிருக்கிறேன் விழாமல் நடக்க நான்.....!

பொம்மைகள் இல்லாத உலகம்...!
பொம்மைகள்...ஒண்ணு சிரிச்சிட்டு இருக்கும். இல்லைனா வெச்ச இடத்துல இருந்து அசையாமஇருக்கும்.
மழை, வெயில், காத்து எதப் பத்தியும் கவலைப்படாது....!

சின்ன வயசுல பொம்மைகள் பத்தி அப்படிஒண்ணும் ஆர்வம் இருக்கல. ஆனா,வயசு அதிகமானப்புறம் தான் தெரிஞ்சது பொம்மைகள் இல்லாத உலகத்தில் நம்மாலவாழமுடியாதுன்னு.

அக்காவும், தங்கையும் மரப்பாச்சி பொம்மைகளோட தான் தங்களோட சின்ன வயசகழிச்சாங்க. அது எங்கம்மா விளையாடுன பொம்மையாம்.பின்னாளில தங்களோட பிள்ளைகளுக்கு சீதனமா கொடுத்தாலும் ஆச்சர்யப்படமுடியாது.

இன்னிக்கு நகரத்துல பொம்மைகள் இல்லாத வீடுகளும் சரி, பொம்மைகளை விற்காதகடைகளும் சரி இல்லைன்னு சொல்ல முடியாது.பொம்மைகள் அந்த அளவிற்கு தன்னோட சுட்டு விரலை நம்மை நோக்கி நீட்டிஇருக்கு போல.


தலை உடைஞ்சுபோன ஒரு புத்தர் பொம்மையோட வீட்டுக்கு வந்த தம்பி அது ஒருஅதிசய பொருளாகவே ரொம்ப நாளுக்கு வெச்சிருந்தான்.அவனுக்கு வெவரம் தெரிஞ்சப்ப சிரிக்கும் புத்தர் சிலையை அதிஷ்டத்திர்கானஅறிகுறியாய் மாறிபோயிருந்ததை அப்பாவும், அம்மாவும்ஏததுக்கிட்டிருந்தாங்க.

சிங்கப்பூரில் இருந்து வந்த தன்னோட மாமா கொடுத்த சாவிக்கொடுக்கிறபொம்மையை காட்டி எங்க டீமில் ஒரு ஹீரோவாக வளர்ந்திருந்த "இசக்கி" இப்போதுதுபாயில் ஒரு பொம்மைக்கடையில் வேலை செய்வதாக கேள்வி.

பொம்மைகளுக்கு பசிக்காது. ஆனா, பசிக்கிற மனுசங்கள அடிக்கடி காவுவாங்கும்ன்றது மட்டும் கொஞ்சம் புதுசா இருக்கலாம். ரோட்டுல விழுந்தபொம்மைய எடுக்க போனப்ப வண்டியில மாட்டி செத்துப்போன செவ்வந்தியோட சின்னதங்கச்சிய இப்ப நெனைச்சாலும் மனசு கெடந்து தவிக்குது.இப்படித்தான் ஒருநாள் ரோட்டோரத்துல பொம்ம செய்துக்கொண்டிருந்த ஒருராஜஸ்தானிய குடும்பத்தை பார்த்தேன். மனசு அந்த "பிளாஷ்டர் ஆப் பாரிஸ்"போல ஆகிப்போச்சி. என்ன இருந்தாலும் பொம்மைக்கு பசிக்காதுன்னாலும் பொம்மசெய்யறவனுக்கு பசிக்கும் இல்ல.

எல்லா சாமி பொம்மைகளும் செய்ய தெரிஞ்சிருக்கு. வரம் கொடுக்கிறது தான்எந்த சாமின்னு தெரியல. சாமிய நேர்த்தியா செய்து விக்கிற இவன் இன்னமும்தெருவில டெண்டுப் போட்டு வாழுறான். ஆனா, அந்த சாமி பொம்ம மட்டும் பலரோடவீட்டுல பூஜை அறையில சும்மா செமையா சிரிச்சுகிட்டு நிக்கும்.

பொம்மைகளுக்கு பெயிண்ட் அடிச்சு அழகுப்படுத்துற மக்களை பார்க்கறப்பஎனக்குகூட பொம்மைகள் மேல ஈடுபாடு வர ஆரம்பிக்கிது.

பொம்மைகள் எனக்கு தெரிஞ்சு சாவி கொடுக்கிற வரைக்கும் நகராது. ஆனால்பொம்மைகள் பலருக்கும் வாழ்க்கைய நகர்த்துது இல்ல....
* புகைப்படங்கள்: விஜயகுமார்.ஜெ

தவறுகள்.....!
தவறுகளுக்காக வருத்தப்படுங்கள் -
தெரிந்தும் தெரியாமலும் நிகழ்துவிட்ட செயலுக்கு மன்னிப்பு கேட்பதன் மூலம் ஒரு தவறு நியாயப்படுத்த முடியாமல் நிராயுதபாணியாய் அலையலாம்.
என்னையும், என்னை சார்ந்த ஏதோ ஒரு திணையின் நுனி தெரியாமல் அலைகிற மனதிற்கு கொஞ்சம் ஒத்தடம் தரும் முயற்சியாய் இது அமையலாம்.

தவறுகளை மன்னிக்க பழகுங்கள்-
வருத்தப்படுகிற எல்லோரிடமும் திருவிழாவில் தொலைந்த குழந்தையின் ஏக்கப்பார்வை ஒளிந்துக்கொண்டிருக்கலாம்.
தவறுகளை நியாயப்படுத்துங்கள்-
ஒரு செயலின் வீரியம் சரியாக செல்ல தவறுகள் அவசியமாகின்றன. எந்த தவறின் செயலும் சரியென்ற ஒன்றின் நிராகரிப்பு என்பதை எந்த மரத்தடி ஜோதிடனும் சொல்லாத ஆரூடம்.

தவறுகளை கண்டியுங்கள்-
நியாயங்களை தராசில் வைப்பதற்காகவே தவறுகளுக்கு அலங்காரம் செய்யப்படுகின்றன் என்று மனநிலை பிழன்றவன் எழுதும் வாசகமாய் அமையக்கூடும்.
தவறுகள் பொதுவாகவே வேண்டுமென்றே சுமத்தப்படும் சர்வாதிகாரம் என்பதாகவே அர்த்தபடக்கூடும்.

தவறுகளை தொலைத்துவிடுங்கள்-
அப்போதுதான் தொலையாத மானுடத்துடன் உங்களால் கைக்குலுக்கமுடியும்.
தவறுகள் களைந்த ஒரு பொட்டல் காட்டில் சிறு துளியாய், மொட்டவிழும் சிறு செடியாய் கண்சிமிட்டும் தருணங்களுக்காக காத்திருங்கள்.
தவறின் தவிர்க்க முடியாத நிர்பந்தத்தில் தவறாக இந்த பத்தி முடிந்தால் தவறு என்னிடம் இல்லை, வாசிக்கும் உங்களிடம் இருக்கலாம்.
தவறு வலிந்து திணிக்கப்படுவதாகவே கற்ப்பிதம் செய்யப்படுகின்றன.

போதும் முடித்துக்கொள்கிறேன்-
வேறென்ன செய்ய தவறில்லாமல் எழுதவும், பேசவும் கற்றுக்கொள்ளாமல் தவிப்பவனுக்கு தவறுகள் நியாயமாகவே படுகின்றன.

ரா.நாகப்பன்.

Followers

My photo
dubai, dubai, United Arab Emirates
துபாயில் உள்ள 89.4 தமிழ் பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறேன். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை என ஊடகங்களில் பணிபுரிந்துள்ளேன். என்னுடைய படைப்புகள் 9 புத்தக்கங்களாக வெளி வந்து இருக்கிறது. உணர்வுகளை தளங்களில் பகிர்ந்துகொள்ள துடிக்கும் தோழமை நெஞ்சத்துடன் நான்....

Total Pageviews

GEETHANJALI. Powered by Blogger.

Live Traffic Feed