பொதுவா எல்லோருக்கும் கோபம் வரும். சில கோபம் நியாயம், சில கோபம் ...கேள்விக்குறி...... என்னை பொறுத்த வரை கோபம் ஒரு சாத்தான். ஆனால், அது ஒரு தேவதையாக உருமாறுவதும் தவிர்ப்பதற்கில்லை. கோபம் வந்தால் வெளிப்படுத்துவது இடம் பொருள் ஏவல் குறித்தான விஷயங்களை பொறுத்தது. சில கோபம் இயலாமையால் கல் எறியப்படுவது சங்கடம்...
உங்களுக்கு இப்படி ஒரு அனுபவம் நிகழ்திருக்கிறதா என்று நண்பர் ஒருநாள் தொலைபேசியில் அழைத்து கேட்டார். கொஞ்சம் யோசனைக்கு பிறகு "ஆமாம் எப்போதாவது..." என்பதாக சொன்னதும் அவர் இப்படி தான் சொன்னார், " கோபம் உங்களையும் விட்டு வைக்கல போல" ......என்றார். நான் அலட்டிக்காமல் விட்டு வைக்க நான் ஒன்னும் விரோதி இல்லையே.....என்றதும் கோபமாகிவிட்டார்.
நான் மெது வாக சொன்னேன்... தோழா எனக்கும் தார்மீகமான கோபங்கள் வரும் ஆனால் சிலதை நானே அங்கிகரிப்பேன் சிலதை சிறை சேதம் செய்வேன் பலதை என் இயலாமை கல் எறிந்து துடிக்கவிடும். இருந்தாலும் கோபம் வராமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.....வீட்டில், அலுவலகத்தில் இப்படி பொது இடங்களில் ஏற்ப்படும் கோபம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை சுமந்து வெளிபட்டாலும் பொதுநலன் கருதி வருகிறபோது சில கௌரவிக்கப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இப்படி தான், என் கோபங்கள் என் இயலாமையை சுட்டிய போது வெட்க்கப்பட வேண்டி உள்ளது. தள்ளி நிறுத்திய பேருந்து நடத்துனரிடம் தொடங்கும் கோபம் சக பயணிகளை சீண்டும் அல்லது நம் மேல் அனுதாபத்தை பெற செய்யும் .....பேருந்து நிறுத்தம் பக்கத்தில் மழை தண்ணீர் தேங்கி நிக்கிறது. எல்லோரும் தள்ளி நிற்கின்றனர். நேரம் சென்று கொண்டிருக்க செல்ல வேண்டிய பேருந்து எதிர்பார்த்து நிற்கிறேன். வண்டி வருகிறது முன்னாள் இன்னொரு வண்டி நிற்க வசதி இல்லாத நான் போக வேண்டிய பேருந்து சாலையின் மத்தியில் நிற்க ஓடி ஏற முடியாத நிலை. தொடர்ச்சியாக பின்தொடரும் வண்டிகள். என்னை போல் எல்லோரும் வண்டியை பார்க்க வண்டி எங்களுக்கு டாட்டா சொல்லிக்கொண்டு சென்று விட்டது. அங்கே போக்குவரத்து காவலர் நிற்கிறார்...அவர் இருந்தே இப்படி .....கோபம் என்ன செய்ய...."சார் நீங்க இருக்கும் போதே இப்படி கொஞ்சம் நிப்பாட்ட கூடாதா... " கேட்டதும் தாமதம் ஓடி போய் ஏறக்கூடாதா பேசிக்கிட்டு நிக்கறீங்க என்றாரே பார்க்கணும்....கோபம் ஒருப்பக்கம் வண்டியை தவற விட்ட இயலாமை மறுபக்கம் நல்லவேளையாக இன்னொரு வண்டி வர ஏற செல்கிறேன் அந்த காவலர் அந்த பெருநதி நடத்துனரிடம் "சார் ரொம்ப கோபமா இருக்கார் " என்றதும் என்ன "சார் எது ஆபீஸ் போற நேரத்துல டென்ஷன்" ...நான் என்ன சொல்ல நடந்தது அவருக்கு தெரிய வாய்ப்பில்லை என்றாலும் அவரின் கல் எறிதல் என் இயலாமை மீது என்று உணர்வே நிரம்ப நேரம் தேவை படுகிறது எனக்கு....
கோபம் தேவதைகளை சாத்தான்கள் ஆக்கும். கோபம் இல்லாத தருணங்களை சேகரிப்போமா.......
0 comments:
Post a Comment