அலுவலகம் நுழைந்ததும் ரகுவரன் இருந்துவிட்டார் தெரியுமா என்று நண்பர் சிவசங்கரன் சொன்னதும் ஒரு கணம் அதிர்ந்தேன். எப்போது எப்படி பல கேள்விகள் மனதை பிராண்ட லேசாக நனைந்த ஆடாகினேன். ஒரு நல்ல நடிகர். கைநாட்டு-திரைப் படத்தில் ஒலிக்கும் மழை வருது மழை வருது குடை கொண்டு வா பாடலை கேட்க்கிற போதெல்லாம் இனி ரகுவரன் இல்லை என்கிற வெற்றிடம் மனதை வதைக்கும் என்பதை தற்காலிகமாக ஒத்தி வைக்க முடியாது. சமீபகாலமாக பிரபலங்கள் மரணம் அடைகிற செய்திகள் கொஞ்சம் அதிர்ச்சியை உண்டுபண்ணவே செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.
இருக்கிற போது மனிதன் எல்லாமுமான ஒன்றாக இருந்து விட்டு இறந்து போகிறபோது ஏதும் அற்றவனாக போகிறான் என்பதை உணர்கிறபோது விட்டுபோக ஏதோ ஒன்று தேவை இல்லையேல், இருந்ததற்கான அடையாளம் விதைக்காமல் வாழ்வது வீண் என்பதாகவே யோசிக்க முடிகிறது.
ரகுவரன் என்கிற மனிதன் திரைப்படங்களில் தோன்றாமல் இருந்திருந்தால், தன்னுடைய இருப்பை சரியாக செய்யாத மனிதனாக அவர் வாழ்ந்திருந்தால் இந்த அளவு ஏதோ நம்முடன் பழகிய ஒரு சக நண்பனை போல் பாவிக்க முடியாமல் போய் இருக்கலாம். ஆனால் தன்னுடைய வாழ்க்கையை சரியாக அமைக்க தவறி இருந்தாலும் ஒரு கலைஞனாய் தன் பங்களிப்பை சரியாகவே செய்திருக்கிறார் ரகுவரன்.
கலைஞர்கள் எல்லோருக்கும் வாழ்க்கை வெற்றியை விட கலையில் கிடைக்கும் வெற்றியே பெரிது என்று வாழ்த்துவிடுகிறார்களோ என்பதாகவே யோசிக்க முற்படுகிறேன். ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு பலரை உதாரணப்படுத்தலாம். அதுபோல், ஒரு கலைஞன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கும் சிலரை சுட்டியும் காட்டலாம். ஆனால், ரகுவரன் வாழ்ந்த அடையாளம்.
வில்லத்தனமான நடிகர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஐ நோ இப்படி பேசும் போதே அது ரகுவரன் என்பதை புரிந்து கொள்ளும் படி தன் நடிப்பை விதைத்து விட்டு போய் இருக்கிறார். இருக்கும் போது மனிதன். இல்லாமல் இருக்கும் போது இறைவன். ஒன்றில் இருந்து ஒன்று தொடர்ந்து போவதே வாழ்க்கை.......
அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
0 comments:
Post a Comment