யாராவது கொஞ்சம் கோபமா திட்டிட்டாங்கன்னா இப்பல்லாம் "தனிமையாய் வாழக்கடவாய்" னு சபிக்கணும் போலத்தோனுது.
எல்லோருமே சொல்றமாதிரி தனிமை சுகம் இல்லீங்க நரகம். வேதனை. இன்னும் என்னன்ன வார்த்தைகள் இருக்குமோ அதெல்லாம் போட்டு நீங்க நிரப்பிக்கலாம்.....
எப்பவும் பரபரப்பாவும் கூட்டத்தொடேயும் வாழற இதம் இனிமை தனிமை கொடுக்க தவறிவிடுகிறதுன்னு கொஞ்சம் பெரிசா லெக்ச்சர் பண்ணலாம்.
தண்டவாளம் பக்கத்த்துல வீடு கிடைக்கறப்ப எரிச்சல் அடைகிற உங்களை போல நானும் ஒரு காலத்தில் வேண்டுமானால் இருந்திருப்பேன். ஆனால், இப்பல்லாம் அப்படி இருக்க முடியறதில்ல. ஜன்னல் திறக்க, போற/வர ரயில்களை ரசிக்க முடிகிறது. அதன் தண்டவாள இசைஅமைப்பில்கண்களை மூடி கனவுகளை அழைக்கத் தொடங்கிவிடுகிறேன்னு சொன்னால் அது கொஞ்சம் பலருடைய ஸ்லாங்கில் ஓவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
மார்கெட் பகுதிகள், எப்போதுமே கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காத பஸ் ஸ்டாண்ட் இன்னப்பிற இடங்களில் கவிதைகளாகவும், கதைகளாகவும், எழுத்துகளாகவும் எத்தனையோ புதுபுது விஷயங்கள் "என்ன எடுத்துக்கோ என்ன எடுத்துக்கோ"ன்னு வேண்டிக்கிட்டு நிக்கறாப்பல தோணுது. உங்களுக்கு தோணுமா????????
ஆனால் , சில விஷயங்களை தனிமை, கூட்டத்தால் அழிக்கப்பட்டு விடுகிறது.திரைப்பட கனவுகளில் இருக்கிற எனக்கு இந்த தனிமை ஒரு பெரிய சுமைதான்னு சொல்வேன்.
குரூப்புல பாடற பாடகர்கள், பாடகிகள் அதிகம் சந்திக்கிற வாய்ப்பு கிடைப்பதுண்டு.
ஒரு சிறந்த பாடலுக்கு கூட்டத்தில் நடனமாடிய நடனக் கலைஞர்கள் கூட பலர் எனக்கு நண்பர்களாக இருக்கின்றனர்.
எப்போதாவது கேட்கிற ஒரு பாடல் fm களில் ஒலிக்கிற சந்தர்ப்பங்களில் தன்னுடைய குரல் எது என்று அடையாளப்படுத்த அலைபாய்கிற அவஸ்தை கோரஸ் கலைஞனுக்கு ஒரு வேதனை தான்.
அந்த பத்து பதினைந்து பேர்களில் தன்னை அடையாளம் காணமுயலும் தன் உறவு/நடப்பு சகாக்களை ஆர்வத்துடன் பார்க்கும் அந்த பரிதாபக் கலைஞனின் பார்வைதான் என் தனிமைக் குறித்தான பார்வையும்!!!!!!
இந்த அவஸ்தை உங்களுக்கு நிச்சயம் உண்டாகி இருக்கலாம்....
திரைப்படத்துறையில் மட்டுமில்லை எந்த துறையிலும் கூட்டு முயற்சியில் கடைசியில் தனித்துவமாய் தெரிபவன் கூட்டத்தை தனிமைப்படுத்தி தன்னை பிரபலப் படுத்திகொள்கிறான் எப்போதும்....
தனிமையில் விளைவது அழுகையும் ஒப்பாரியும். கூட்டத்தில் தான் கும்மி அடிக்கமுடியும். கூடவே குட்டுக்களை அன்பாய் பரிமாறிக்கொள்ளமுடியும்.
தனிமை எப்போதுமே நரகம் தான்...
என்னங்க நான் சொல்றது சரிதானே?????????????????????
3 comments:
வணக்கம் நாகப்பன். நான் கல்யாண்குமார். உங்களின் வலைத்தளங்களை பார்வையிட்டேன். கவிதைகளில் தனித்துவமும் நேர்த்தியும் தெரிகிறது. எனது வலைத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். தொடர்பு கொள்ளுங்கள்.
kalyanje.blogspot.com
kalyangii@gmail.com
Vanakkam Nagappan:-)
Nalamaa ..Romba naatkal aachu paathu.Inaiku than numba fm ketkum vaaipu kedachudhu.Thodarndhu office works,exams,ipo oru vibathu..Thodarndhu edhulayaum meedu pada mudilaa..Mudinja kandippa oru naal studioku varaen.
Aravind Bharathi(aravindbharathis@gmail.com)
//இது முதல் மழை......... சின்ன துளிக்குள் கடலாக...... ஒற்றை சொல்லுக்குள் மடலாக.....//
இது ரொம்ப அழகு.......என்னை மிகவும் ஈர்த்தது...மழைப் பைத்தியம் ஆயிற்றே!
அன்புடன் அருணா
Post a Comment