பொம்மைகள்...ஒண்ணு சிரிச்சிட்டு இருக்கும். இல்லைனா வெச்ச இடத்துல இருந்து அசையாமஇருக்கும்.
மழை, வெயில், காத்து எதப் பத்தியும் கவலைப்படாது....!
சின்ன வயசுல பொம்மைகள் பத்தி அப்படிஒண்ணும் ஆர்வம் இருக்கல. ஆனா,வயசு அதிகமானப்புறம் தான் தெரிஞ்சது பொம்மைகள் இல்லாத உலகத்தில் நம்மாலவாழமுடியாதுன்னு.
அக்காவும், தங்கையும் மரப்பாச்சி பொம்மைகளோட தான் தங்களோட சின்ன வயசகழிச்சாங்க. அது எங்கம்மா விளையாடுன பொம்மையாம்.பின்னாளில தங்களோட பிள்ளைகளுக்கு சீதனமா கொடுத்தாலும் ஆச்சர்யப்படமுடியாது.
இன்னிக்கு நகரத்துல பொம்மைகள் இல்லாத வீடுகளும் சரி, பொம்மைகளை விற்காதகடைகளும் சரி இல்லைன்னு சொல்ல முடியாது.பொம்மைகள் அந்த அளவிற்கு தன்னோட சுட்டு விரலை நம்மை நோக்கி நீட்டிஇருக்கு போல.
தலை உடைஞ்சுபோன ஒரு புத்தர் பொம்மையோட வீட்டுக்கு வந்த தம்பி அது ஒருஅதிசய பொருளாகவே ரொம்ப நாளுக்கு வெச்சிருந்தான்.அவனுக்கு வெவரம் தெரிஞ்சப்ப சிரிக்கும் புத்தர் சிலையை அதிஷ்டத்திர்கானஅறிகுறியாய் மாறிபோயிருந்ததை அப்பாவும், அம்மாவும்ஏததுக்கிட்டிருந்தாங்க.
சிங்கப்பூரில் இருந்து வந்த தன்னோட மாமா கொடுத்த சாவிக்கொடுக்கிறபொம்மையை காட்டி எங்க டீமில் ஒரு ஹீரோவாக வளர்ந்திருந்த "இசக்கி" இப்போதுதுபாயில் ஒரு பொம்மைக்கடையில் வேலை செய்வதாக கேள்வி.
பொம்மைகளுக்கு பசிக்காது. ஆனா, பசிக்கிற மனுசங்கள அடிக்கடி காவுவாங்கும்ன்றது மட்டும் கொஞ்சம் புதுசா இருக்கலாம். ரோட்டுல விழுந்தபொம்மைய எடுக்க போனப்ப வண்டியில மாட்டி செத்துப்போன செவ்வந்தியோட சின்னதங்கச்சிய இப்ப நெனைச்சாலும் மனசு கெடந்து தவிக்குது.
இப்படித்தான் ஒருநாள் ரோட்டோரத்துல பொம்ம செய்துக்கொண்டிருந்த ஒருராஜஸ்தானிய குடும்பத்தை பார்த்தேன். மனசு அந்த "பிளாஷ்டர் ஆப் பாரிஸ்"போல ஆகிப்போச்சி. என்ன இருந்தாலும் பொம்மைக்கு பசிக்காதுன்னாலும் பொம்மசெய்யறவனுக்கு பசிக்கும் இல்ல.
எல்லா சாமி பொம்மைகளும் செய்ய தெரிஞ்சிருக்கு. வரம் கொடுக்கிறது தான்எந்த சாமின்னு தெரியல. சாமிய நேர்த்தியா செய்து விக்கிற இவன் இன்னமும்தெருவில டெண்டுப் போட்டு வாழுறான். ஆனா, அந்த சாமி பொம்ம மட்டும் பலரோடவீட்டுல பூஜை அறையில சும்மா செமையா சிரிச்சுகிட்டு நிக்கும்.
பொம்மைகளுக்கு பெயிண்ட் அடிச்சு அழகுப்படுத்துற மக்களை பார்க்கறப்பஎனக்குகூட பொம்மைகள் மேல ஈடுபாடு வர ஆரம்பிக்கிது.
பொம்மைகள் எனக்கு தெரிஞ்சு சாவி கொடுக்கிற வரைக்கும் நகராது. ஆனால்பொம்மைகள் பலருக்கும் வாழ்க்கைய நகர்த்துது இல்ல....
* புகைப்படங்கள்: விஜயகுமார்.ஜெ